Thursday, 7 May 2015

சிறுகதை


உறுதி கொண்ட நெஞ்சம்
.மகேஸ்வரி

     “வேலை கிடைக்காததால் மனம் உடைந்த இளைஞர் தற்கொலைபெருமாயி பொறிகலங்கி நின்றாள். வெங்காயத்தை எடுத்துக் கொண்டிருந்த கையை உதறிவிட்டு நாளிதழ் படிக்கும் பெரியவரைப் பார்த்தாள்.
     பக்கத்தில் நின்றவர்களுக்காக உரத்த குரலில் செய்தியைப் படித்துக் கொண்டிருந்தார் அவர்.
     “படித்துவிட்டு இரண்டு ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த இளைஞர் இறுதியில் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தாயாருடன் உடன் பிறந்தவர்களும் கதறியழுததைக் கண்டு அங்கிருந்தவர்களும் கண்ணீர் விட்டனர். இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் நேற்று காலையில்............
     “அதற்கு மேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லைஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி விரைந்தாள்.
     தெருவாசலில் யாரையும் காணோம்! கதவு திறந்திருந்தது. தன் வயதையும் மறந்து குடுகுடுவென்று உள்ளே ஓடினாள். மகன் முருகு நாற்காலியில் அமர்ந்திருந்து மேசையில் தலையைக் கவிழ்த்துக் கொண்டிருந்தான்.
     ஒரே நிசப்தமாக இருந்தது!
     அழுகிறானா 
     தூங்குகிறானா?
     இல்லை....
     ஐயோ.....முருகு.....
     அலறிக்கொண்டு ஓடி அவனது கால்களைக் கட்டிப் பிடித்தவள் குலுங்கி அழுதாள். சூடான கண்ணீர் அவன் பாதங்களை நனைத்தது.
     தாயாரின் திடீர் செய்கையால் பதறிப்போன முருகு அம்மாவைத் தூக்கி நிறுத்தப் பிரயத்தனம் செய்தான்.
     அவனால் இயலவில்லை!
     இருபத்தேழு வயது இளைஞனான அவனால் உழைத்து ஓடாகி சுருகாகிக் கிடந்த தன் தாயின் பிடியை விலக்க முடியவில்லை என்றால் அவளது மனத்துயரம் எத்தகையதாக இருக்குமோ.....?
     “அம்மா..அம்மா! என்னம்மா இது! என்ன நடந்தது சொல்லுங்கம்மா.....
     அவனது குரலை அழுகை அடைத்தது.
     தாயின் பிடி மேலும் இறுகியது. அவனும் நாற்காலியை விட்டு மெதுவாக நகர்ந்து தாயோடு அமர்ந்து கொண்டான். கதறியழும் தாயைப் பாசத்தோடு தன் நெஞ்சில் பதித்துக் கொண்டு சமாதானப்படுத்தத் தொடங்கினான்.
     “அம்மா. என்ன விஷயமாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்களம்மா! நீங்கள் அழுவதைப் பார்த்தால் என் நெஞ்சே வெடித்து விடும் போலிருக்கிறது. “சொல்லுங்கம்மா
     அவனும் இலேசாகத் தேம்பி அழத் தொடங்கினான். அவள் சட்டென்று அழுகையை நிறுத்திவிட்டு மகனை ஏறிட்டுப் பார்த்தாள்.
     “ஐயா...உனக்கு வேலை கிடைக்காட்டியும் பரவாயில்லை! காலம் முழுதும் நான் கஞ்சி ஊத்துவேன்..! நீ மட்டும் மனசு விட்டுப் போயிவிடக்கூடாது எதுவும் செஞ்சிடாதே. அப்புறம் நானும் உயிரோட இருக்கமாட்டேன்.... சத்தியம் பண்ணுப்பா
     அவன் தாயாரை மெதுவாக நிமிர்ந்து பார்த்தான். ஏம்மா! கடைக்குப் போனீங்களே. அங்கே யாராவது ஏதாவது சொன்னாங்களா.?
     “இல்லைப்பா.. பேப்ரிலே படிச்சாங்க..” அவனுக்குப் புரிந்து விட்டது.
     மேசையில் கிடந்த நாளிதழைப் பார்த்தான். ஞாயிறு மலரில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் அந்தச் செய்தி வெளியாகி இருந்தது.
     அந்தச் செய்தி அவனையும் பாதித்திருந்தது. அதனால் தான் சோர்வோடு மேசையில் சாய்ந்திருந்தான்.
     இந்த செய்திகள் எல்லாம் அம்மாவின் காதில் விழாது! விழவும் கூடாது. என்றுதான் நினைத்திருந்தான். ஆனாலும் அது எட்டி விட்டது.
     அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி அவளுக்கு இல்லை. பாவம்! இவ்வளவு சீக்கிரம் இந்தச் செய்தி தெரியவந்தது இப்படி நிலை குலைய வைத்து விடும் என்று அவன் நினைக்கவும் இல்லை 
     தன்னைப் பட்டதாரியாக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையால் அவள் பட்ட வேதனைகளையும் மெழுகுவர்த்தி மாதிரி தன்னையே அழித்துக் கொண்டு தன்னுடைய அறிவுக்கு ஒளி கொடுக்க கடுமையான உழைத்த உழைப்பையும் எண்ணிப் பார்த்தபோது நெஞ்சு விம்மியது. 
     பணம் அதிகமாக தேவைப்பட்டபோதெல்லாம் ஒவ்வொரு நகையாக அடகு வைத்தும் விற்றும் மேற்கொண்டு கடன் வாங்க அலைந்ததும்.....! 
     படிப்பறிவில்லாத ஓர் ஏழைத்தாய் தன் உடல் உழைப்பினால் சம்பாதிக்க பணத்தைக் கொண்டு பல்கலைக்கழ்கம் வரையில் மகனைப் படிக்க வைக்க முடிந்தது.    
     ஆனால் பட்டப் படிப்பு படித்த ஓர் இளைஞனால் தன் தாயாருக்கு ஒரு வேளை உணவுக்குச் சம்பாதித்துத்தர முடியாமல் போய்விட்டதே....சே!
     அவன் உள்ளத்தில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போன்ற உணர்வு!
     விண்ணென்று இதயம் வலித்தது. பள்ளிக்கூடத்திற்கே போகாதவன் பக்கத்து வீட்டு பரமசிவம்!
     பால் விற்றே மாதம் ஆயிரம் வெள்ளி வரை ஈட்டுகிறான். ஆரம்பப் பள்ளியோடு படிப்பைத் தொடர முடியாமல் விட்டவந்தான் ஆறுமுகம். இடியப்பம் விற்றே குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறான்.
     ஆனால் உயர்கல்வியைக் கற்று முடித்த தன்க்குத் தாயைத் காக்கும் சக்தி இல்லாமல் அவள் மனத்தை நோகவும் செய்யும்படியாயிற்றே என்று எண்ணும் போது தன் மீதே வெறுப்பு ஏற்பட்டது.
     நாளிதழில் அந்தச் செய்தியைப் படித்த போது அந்த இளைஞனின் அன்னைக்காகவே மனம் கலங்கித் திவித்தது.
     அந்தத் தாயின் நிலையில் தன் அன்னையைக் கற்பனை செய்து பார்க்கக் கூட அவனால் முடியவில்லை.
     அம்மாவின் கண்ணீரைத் துடைத்துவிட்டுப் புன்னகை செய்தான்.
     அம்மா! உங்கள் மகன் கோழையல்ல! அதோடு காலமெல்லாம் எனக்காகவே உழைத்துச் சம்பாதித்துப் பாடுபட்டு என்னை வளர்த்து ஆளாக்கிய உங்கள் நெஞ்சில் ஆறாத வேதனையை ஏற்படுத்தி விடுமளவுக்குக் கல் நெஞ்சக்காரனுமல்ல..! இந்த உடம்பில் வலுவிருக்கும் போது, அறிவில் தெளிவிருக்க உங்கள் வயிற்றில் நெருப்பை வாரிக்கொட்டி விடமாட்டேன்.!
     நீங்க இப்படியெல்லாம் விபரீதமாக நினைத்து வீணாகக் கவலைப் படக்கூடாது! கூடுய சீக்கிரமே வேலை கிடைத்துவிடும்.
     தன் தாய்க்கு ஆறுதல் கூறி நம்பிக்கையூட்டினான். அதே சமயம் அந்த உறுதி அவன் உள்ளத்தில் விசுவரூபமெடுத்தது.
     பெருமாயி தன் அருமை மகனின் முகத்தைப் பார்த்தாள்.
     ஐயா..! நீ வேலை செய்யாட்டியும் பரவாயில்லேப்பா! என் கூடவே இருந்தா போதும்..! யார் என்ன சொன்னாலும் நீ கவலைப் படக்கூடாது! மனசு நோவக்கூடாது...
     அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.
     “இல்லேம்மா......
     இனிமேல் யாரும் எதுவும் சொல்ல இடந்தராதப்படி கூடிய சீக்கிரமே ஒரு வியாபாரத்திலே ஈடுபடப் போகிறேன்.
     யாவாரமா?
     தாய் வியப்போடு மகனைப் பார்த்தாள்..?
     “ஏம்மா.....நான் வியாபாரம் செய்யக் கூடாதா..?
     அதுக்கில்லேப்பா! நீ படிச்ச படிப்பு என்ன.. இப்படி
     மகன் சட்டென்று இடை மறித்தான்..
     “வியாபாரம் என்றாலே நம்மவர்களுக்கு மட்டமாபடுதே.....!!
     “அதுக்கில்லே. படிச்சபுள்ளே தெருவிலே நின்னு..
     தாய்க்கு அழுகை தொண்டையை அடைத்தது.” வியாபாரம் என்றால் ஐஸ் தண்ணீர் விற்கிறதும், இடியப்பம் விக்கிறதும் மட்டும்தானா.....? இல்லை பசார் மாலாமிலே படுதாவை விரிச்சு காய்கறி விற்கிறதா.....? ஏம்மா தெருவிலே நின்றால்தான் வியாபாரமா?
     தாய் மௌனமாக அவனையே பார்த்தாள்.
     அம்மா! வெருமெனே இப்படி ஊரைச்சுற்றி வந்த பெத்தவங்க உழைப்பில் வயிறு வளர்க்கிறதைவிட தன்னால் முடிந்த எந்த வேலையையும் எந்த வியாபாரத்தையும் செய்வது தப்பில்லேம்மா..... படிப்பறிவோ தொழிற்பயிற்சியோ இல்லாதவங்க பாவம் ஏதாவது சின்ன சின்னதா தொடங்ட்கித்தானே முன்னுக்கு வர முடியும்!
     “அப்புறம் என்ன யாவாரம் ஐயா?
     பெருமாயி தன் மகன் மீது கொண்ட பாசத்தால் ஐயா என்றுதான் அழைப்பது வழக்கம்.
     அவன் கண்கள் நாளிதழில் பெரிதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்த அந்த விளம்பரத்தையே இமைக்காமல் பார்த்தன. 
     அம்மா! நான் செய்யப் போவது அதே மாதிரி சின்ன வியாபாரம் தான்! ஆனால் அதைப் பெரிய அளவில் செய்து கூடிய சீக்கிரமே நல்ல நிலைமைக்கு வந்திடலாம்! அதுவரைக்கும் நீங்க மனம் கலங்காமல் யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் இருக்க வேணும்.....!
     தாயின் உள்ளத்தில் கவலைப் படர ஆரம்பித்தது.
     “என்னப்பா செய்யப் போறே?
     அம்மா! பட்டப்படிப்பு படிச்சுட்டா மட்டும் வேலை கிடைத்து விடாது. இப்போது நாட்டிலே எத்தனையோ பட்டதாரிங்கதான் வேலை இல்லாமல் அலைந்து அவதிப்படுறாங்க எல்லாரும் ஆபீஸ் வேலையும் அரசாங்க வேலையும் தேடி அலையறதுதான் காரணம்..... நானுந்தானே....”
     அதிலே என்னப்பா தப்பு? பெரிய வேலை பார்க்கத்தானே கஷ்டப்பட்டு பெரிய படிப்பு படிக்கிறாங்க! யாவாரம் செய்ய எதுக்கு இந்தப் பாடு.
     பட்டதாரி மகன் சிரித்துக்கொண்டான். தன்னைப் போன்ற படித்த இளைஞர்களுக்கே புரியாத போது படிக்காத பால் மரக்காட்டு பெருமாயி அம்மாவுக்கு மட்டும் எப்படி புரிந்திருக்க முடியும்?
     காலங்கடந்த ஞானோதயம் பெற்ற மகன் அம்மாவின் மனம் நோகாமல் தன் திட்டத்தை வெளிப்படுத்த தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.
     “என்னப்பா யோசிக்கிறே?
     அம்மா நான் சொல்வதைக் கேட்டு வருத்தப்ப்டாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். போன வாரம் என் நண்பனைப் பார்த்தேன். அவனுடைய மாமா மில் வைத்திருக்கிறார். அவனும் அதிலே தான் வேலை செய்றான்! எனக்கு ஒரு வேலை போட்டுத்தரச் சொல்லிக் கேட்டேன் வரச் சோன்னான்.
     பெருமாயி அதிர்ச்சியோடு மகனைப் பார்த்தாள்.... “ஐயா.. முருகு என்னப்பா இதெல்லாம்.....? நீ படிச்ச படிப்புக்கும் வாங்கினப் பட்டத்துக்கும் மதிப்பே இல்லாமல் இப்படியெல்லாம் செய்யலாமா.....? நீ வேலை பார்க்கவில்லையே என்று எப்பவாது சொல்லியிருப்பேனா?
     அவளால் பேச முடியாமல் தொண்டைக் குழிக்குள் துயரம் அடைத்தது. காதோரத்து நரம்புகளில் விண்ணென்று வலி எடுத்தது.
     மகன் சட்டென்று தாயாரின் கைகளை எடுத்து ஆதுரத்தோடு தன் கைக்குள் வைத்துக் கொண்டு மெல்ல வருடினான் 
     “அம்மா நானும் எவ்வளவோ முயற்சி செய்தேன் முடியலே! இப்பதான் தெரியுது அநியாயமா காலத்தை வீணாக்கிட்டேன்! அறிவு வளர்ந்திருப்பதா நெனச்சு என்ன நானே ஏமாத்திக்கிட்டு இருந்துட்டேன்! ஐம்பது வயசுக்கு அப்புறமும் படிப்பறிவே இல்லாத ஒரு தாயாலே மகனுக்கு சோறுபோட முடியும்! இருபத்தேழு வயசு மகனாலே உழைச்சு சம்பாதிக்க முடியாதாம்மா என்னம்மா நியாயம் இது?
     எனக்கு சோறு போடறதுக்காக நீ கூலி வேலைசெய்யனுமாப்பா? நான் அதுக்காகவா இந்தப் பாடுபட்டேன்! நீயுந்தான் என் ஆசைக்காக அரை வயிறுமா சாப்பிட்டதோட ராப்பகலா படிச்சு பட்டம் வாங்கினே! இப்போ இப்படி மனசு நொந்து போயிட்டியே ஐயா?
     மகன் சட்டென்று இடைமறித்தான்.
     “அம்மா! அப்படிச் சொல்லாதீங்க! நொந்து போன மனசிலே இப்போதான் துணிச்சல் துளிர் விட்டிருக்கு! அதை இப்பவே வேரோடு பிடிங்கிடாதீங்க! நான் நல்லா யோசிச்சிதான் இந்த முடிவுக்கு வந்தேன்! ரெண்டு மாசம் அங்கே வேலை செய்து தொழிலைப் பற்றி தெரிஞ்சுகிட்டுப் பிறகு நானே சொந்தமா தொடங்கப் போறேன். என் நண்பனும் அவன் மாமாவும் எனக்கு எல்லா உதவியும் செய்றதா சொல்லி இருக்காங்க
     பெருமாயி சற்றே திகைத்து நின்றாள்.
     “என்னப்பா மாவு அரைக்கிற தொழிலா?
     “இல்லைம்மா மிளகாய்பொடி அரைக்கிறது......” அவன் சிரித்துக் கொண்டே இப்படிக் கூறினான் 
     “மிளகாய்ப்பொடி காட்டமாகத்தான் இருக்கும்! ஆனால்  சிக்கிரமே சூடு பிடிச்சிடும்! இப்போ மார்க்கேட்டிலே அதுக்குத்தான் மவுசு! சீன, மலாய் பெண்களும்கூட இந்தியர்களின் கறி வகையிலே சுவை காண ஆரம்பிச்சு வாங்கத் தொடங்கிட்டாங்க!
     வாயடைத்துப் போன பெருமாயி மகன் பேசுவதையே கேட்டுக் கொண்டு மௌனித்திருந்தாள்.
     “இதோ பார்த்தீர்களா பாபா, சங்கு மார்க்கு, மகாலிங்கம் மார்க்கு, இதோட பெருமாயி மிளகாய்ப்பொடி, சாம்பார்ப்பொடி, ரசப்பொடி அப்புறம் திடீர் பாயாசம் முறுக்கு வட இட்டிலி
     சோகம் கப்பிக் கிடந்த பெருமாயி முகத்தில் இலேசான சிரிப்பு தட்டியது.
     “முருகு மார்க்குன்னு போடு! அதுதான் ராசியான பேரு! என் வாயாலே சோல்லிச் சொல்லிப் பூரிச்சிப்போவேன் ஐயா
     “அம்மா! வேலை கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்ளும் மகனைவிட ஏதாவது செய்து வாழ்க்கையிலே உயரப் பார்க்கிற மனதில் உறுதியுள்ள மகனே நல்லதுன்னு நீங்க நினைக்க மாட்டீங்களா?
     பெருமாயி சட்டென்று மகனின் வாயைப் பொத்தினாள். அவள் நெஞ்சு படபடத்தது.
     “ஐயா நீ வேலையே செய்யாட்டிக்கூட நான் வருத்தப்படவே மாட்டேன்! நீ படிச்சபுள்ள நல்லது கெட்டது தெரியும்! உன் விருப்பம் போச செய்யப்பா! நான் இனிமேலும் தடையே சொல்ல மாட்டேன்! எனக்கு என் பிள்ளைதான் முக்கியம். வேலையில்லே! நீ தீர்க்காயுசா இருந்தா போதும்பா
     அவள் கண்கள் சிந்திய கண்ணீர் துளிகள் மகனின் கையில் விழுந்து வாழ்த்துக்கள் கூறின. அவன்  உறுதி கொண்ட நெஞ்சோடு நிமிர்ந்து நின்றான்.




 சிறுகதை விமர்சணம் :-
அரை நூற்றாண்டுகால இலக்கிய அனுபவம் கொண்டவர் .மகேஸ்வரி. அனுபவ முதிர்ச்சியின் அடையாளமாக சிறுகதைகள் மலேசிய இலக்கியத்தின் எல்லா நிலையிலும் தடம் பார்த்து, கால் பதித்து இலக்கிய வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டவர். பெண் எழுத்தாளர்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள், கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றைப் படைத்துள்ளார். தமிழகத்தின் கணையாழி, கலைமகள் போன்ற இதழ்களில் இவருடைய சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மஞ்சரி இதழில் அமரர் தேவன் நினைவு பயணக் கட்டுரைப் போட்டியில் முதல்பரிசு பெற்றார்.

கதைச் சுருக்கம்

நாள்தழில்வேலைக் கிடைக்காத இளைஞன் தற்கொலைஎன்ற செய்தியைக் கேட்ட மெருமாயி தன் மகனைத் தேடி விரைந்து பதற்றதோடு செல்கிறாள். தன் மகன் அமைதியாக தலைகுனிந்து கிடப்பதைக் கண்டு பதறுகிறாள். பிறகு, தாய் கண் கலங்கி அழுவதைக் கண்டு மகனும் கண்கள் கலங்கி விசாரிக்கின்றான். மெருமாயி தன் மகன் வேலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, தப்பான எந்தவொரு முடிவும் எடுக்காமல் தன்னோடு இருக்கும்படி வேண்டிகிறாள். தான் உழைத்து தன் மகனைப் பார்ப்பதாகக் கூறுகிறாள். மகனோ மிகவும் வருத்தத்தோடு படிப்பற்றவர்கள் உழைத்துச் சம்பாதித்து வளமாக வாழ்கின்றனர்; ஆனால், தானோ நிரம்பப் படித்திருந்தும் வேலையின்றி இருப்பதாகக் கூறி வருந்துகிறான். எனவே, மகன் தனது நண்பன் ஒருவனின் தயவால் அவனுடைய மாமாவின் மில்லில் மிளகாய் பொடி தயாரிக்கும் வியாபாரத்தில் இறங்கப் போவதாக தன் முடிவைக் கூறுகிறான். பெருமாயியோ, படித்த படிப்பிற்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை என்றும், வியாபாரம் என்றதும் மறுப்பு தெரிவிக்கிறாள். பிறகு, மகன் வேலை இல்லாது திண்டாடுபவர்கள் தவறான முடிவுக்கு ஆளாகுகின்றனர். ஆனால், தானோ உறுதி கொண்ட நெஞசத்தோடு நல்ல முடிவுக்கு வந்துள்ளதாக எடுத்துக் கூறுகிறான். எனவே, தன் மகனின் தெளிவான சிந்தனையையும் நிலையையும் கண்டு அகம் நெகிழும் பெருமாயி ஆனந்த கண்ணீரோடு தன் மகனை வாழ்த்துகிறாள்.    

நூல்
ஒரு தாயின் இலட்சியக் கனவு


     இலக்கியக் குரிசில் மா.இராமையா அவர்கள் நீண்டகாலமாக மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் வலம் வந்து மிகச் சிறப்பான இடத்தை வகித்து வருகின்றார் என்றால், அதற்கு அவரிடமுள்ள தமிழ்ப் பற்றும், சமுதாயத்தின்பால் அவர் கொண்டுள்ள அளப்பரிய தமிழாசிரியர்களும், தமிழ் ஊடகங்களில் பணிபுரிபவர்களும் தமிழிலக்கியத் துறையில் ஈடுபடுவது இயல்பான ஒன்று. தமிழிலக்கியத் துறைக்காக அர்ப்பணித்த பெருந்தகை அவர்.
     இவர் பல்வகை இலக்கியப் படைப்புகளையும் உருவாக்கி மலேசியாவின் முன்னணி எழுத்தாளராக விளங்குகின்றார். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என எல்லா வடிவங்களிலும் முத்திரை பதித்துள்ளார். ‘மலெசியத் தமிழ் இலக்கிய வரலாறு’, ‘மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்ஆகிய நூல்கள் எழுதியவர். பல பல்கலைக்கழக மாணவர்கள் அன்னாருடைய படைப்புகளை ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளனர். இவருடைய படைப்புகள் மலேசியத் தமிழர்களைப் படம்பிடித்துக் காட்டுகின்றன என்று சொன்னால் மிகையாகாது.
     இவருடையப் படைப்புகளில்ஒரு தாயின் இலட்சியக் கனவுஎன்னும் இந்த நாவலும் ஒன்று. 1970-ஆம் ஆண்டுகளில் மலேசியத் தமிழர்களின் வாழ்வியலை பின்னணியாகக் கொண்டு இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில் உயர் கல்வி பயின்று வேலைக்குச் செல்வது நகர்ப்புறத் தமிழர்கள் மத்தியில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும், கிராமப் புறங்களில் பெண்களுக்கான சுதந்திரம் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருந்தது.
     கல்வித் துறையில், ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவரும் திறமைக்கேற்ப முன்னேற வாய்ப்புகளை மலேசியாவின் பல்லின மக்கள் பெறத் தொடங்கிய காலகட்டத்தில் நம்மவர்கள் மத்தியில் பழைய நியதிகளின் அடிப்படையில் பெண்களை ஆண் ஆதிக்கத்தில் அடிமைபோல் நடத்தும் பழக்கமும் ஆங்காங்கு தலை தூக்கியே இருந்தது. இக்கதையின் நாயகி பொற்கொடி அக்காலகட்டத்தில், வளரத் துடித்த பெண்களின் சின்னமாகவே திகழ்கிறாள்.
     சமுதாயத்தில் ஆண்களிலும், பெண்களிலும், நல்லவர்களும் உண்டு, கெட்டவர்களும் உண்டு. இக்கதையில் அத்தகைய மாந்தர்களும் நன்றாகவே பிரிதிபலிக்கின்றனர். கதை நாயகன் சுந்தரேசன் வஞ்சிக்கப்படுவதில் ஆண்களும் பெண்களும் ஈடுபடுகின்றனர். பழைய சம்பிரதாயங்களை நம்பியவர்கள் ஆற்றாமையில் ஆழ்வதையும், வலிவுள்ளோர் பணம் படைத்தவர்களுடன் இணைவதையும் கதை நாயகனுக்குத் துணை நின்று கௌரவம் காக்கும் பொறுப்பை புதுமைப் பெண் பெற்கொடி ஏற்றுக் கொண்டு, வெற்றி பெறுவதைக் காண்கிறோம்.

கதைச் சுருக்கம் :-
இந்நாவலின் முதன்மைக் கதாப்பாத்திரம் பொற்கொடி. பொற்கொடி அலமேலுக்கு ஒரே மகள். ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் மகளை படிக்க வைக்க வேண்டும் என்பதில் முழு மூச்சாக இருந்தாள் அலமேலு. தன் கணவன் வேலப்பன் எவ்வளவு தொந்தரவுக் கொடுத்தாலும் தன் மகளை ஒரு வழக்கறிஞறாக படிக்க வைத்தாள். பொற்கொடி வழக்கறிஞர் பயிற்சிக்கு சென்றிருக்கும் சமையத்தில் அலமேலு நோய் வாய்ப் பட்டிருந்தாள். அதை தன் மகளிடம் சொல்லாமல் இருந்தாள். திடீர் ரென்று அலமேலு காலமானாள். அதைக் கேள்வியுற்ற பொற்கொடி தன் தாயின் இறுதி சடங்கிற்கு வருகிறாள். அதில் அவளுக்கு பல தடங்கல் ஏற்படுகிறது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் அவளுக்கு உதவியாக வருகிறான் சுந்தரேசன். ஒரு வழியாக அவள் தன் வீட்டை வந்தடைகிறாள். பொற்கொடிக்கும் வேலப்பனுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு வழியாக வாசுகி அம்மாளின் மூலம் ஒரு முடிவுக்கு வருகிறது. தன் தாய் இல்லாத தருவாயில் தனக்கு உறுதுணையாக வருகிறாள் மல்லிகை. மல்லிகை எதிர் வீட்டு பத்து வயது சிறுமி. தான் வீட்டில் இல்லாத சமயத்தில் தன் தாயிக்கு உதவியாக இருந்தவள் மல்லிகை. பொற்கொடிக்கு ஓர் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. மல்லிகை வேர் யாருமில்லை தனக்கு இரயில் பயணத்தில் உதவியாக இருந்த சுந்தரேசனின் தங்கைதான். பொற்கொடியின் அழகில் சுந்தரேசன் மயங்கி விழுகிறான். பொற்கொடியும் சுந்தரேசனின் நற்குணங்களைக் கண்டு அவன் மீது காதல் வாய்ப் படுகிறான். அவர்கள் இருவரும் காதல் செய்வது சுந்தரேசன் வீட்டில் பணிப்புரியும் வள்ளிக்குப் பிடிக்க வில்லை ஏனென்றாள், வள்ளி மறைமுகமாக சுந்தரேசனை காதலித்து வாந்தாள். பொற்கொடியும் சுந்தரேசனுயும் பிரிக்க முடிவுச் செய்தால். பொற்கொடியிடம் சென்று அவளும் சுந்தரேசனும் திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களுக்கு பிறந்த குழந்தை பொற்கொடிதான் எனவும் பொய்யானக் கதையைக் கட்டினாள் வள்ளி. வள்ளிக் கூறியது உண்மை என்று எண்ணி சுந்தரேசனைத் தவிர்க்க முடிவு செய்தாள். பொற்கொடியின் செயலில் மாற்றத்தை அறிந்தான் சுந்தரேசன். அதற்கான காரணத்தை அறிய முட்பட்டான். அப்போதுதான் தெரியவந்தது இது வள்ளியின் செயல் என்று. பலப் போராட்டத்திற்குப் பிறகு சுந்தரேசனும் பொற்கொடியும் திருமணம் செய்துக் கொண்டனர். பொற்கொடியின் தந்தை அவளது காதலுக்கு எதிர்ப்புகள் தெரிவித்தாலும் சுந்தரேசனின் நற்குணங்களை அறிந்துக் கொண்டு அவ்விருவரை ஒன்று சேர்த்து வைத்தார். ஆனால் சுந்தரேசனுக்கு தன் மனைவி பொற்கொடி ஒரு வழக்கறிஞர் என்று தெரியாது. அவ்விருவரும் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். பொற்கொடி தன் வாழ்க்கையில் வந்தப் பின் பல இனிப்பான சம்பவங்கள் நடந்தேறியது. இது பொற்கொடியின் அதிஷ்டம் என்று எண்ணி மிகவும் மகிழ்ச்சியுற்றிருந்தான். சுந்தரேசன் வேலைப் பார்க்கும் வேலையிடத்தில் சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைத்தது. மகிழ்ச்சி வெல்லத்தில் சுந்தரேசனும் பொற்கொடியும் இருந்தனர். ஆனால், இதனால் அவர்களுக்கு பெரியப் பிரச்சனை வரும் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. சுந்தரேசன் வேலைச் செய்யும் இடத்தில் வேலைச் செய்யும் கண்ணன் என்பவர், சுந்தரேசன் வேலை மீது கர்வம் கொண்டிருந்தான். எப்படியாவது சுந்தரேசனை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் சுந்தரேசனை ஒரு திருட்டுப் பழியில் சிக்கவைத்து விட்டான் கண்ணன். அதனால், காவல்துறையினர் சுந்தரேசனை சிறைப் பிடித்தனர். அதை அறிந்த பொற்கொடி மிகவும் வேதனைப் பட்டாள். தன் கணவரை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி பல வழ்க்கறிஞரைப் பார்த்தால். அவர்களும் கைவிரித்தனர். அப்போதுதான் அவள் நினைவுக்கு வந்தது. தானும் ஒரு வழக்கறிஞர் தான். நானே என் கணவனது கேஸ்யை எடுத்து நடத்த முன்வந்தாள். அதற்காக பல செயல்களில் ஈடுப்பட்டாள். தன் கணவன் ஒரு நிரபராதி அவன் மீது எந்த ஒரு குற்றமும் இல்லை என்ற தகவல் அவளுக்கு கிடைத்தது. சுந்தரேசனுக்காக வாதாட யார் வருகிறார் என்றச் செய்தி, ரகசியமாகவே இருந்தது. முதல் முதலாக தன் தாயின் கனவை நிறைவேற்றப் போவதை எண்ணி மகிழ்ச்சிக் கொண்டாள். இருந்தாலும் தன் கணவனுக்கு தான் ஒரு வழக்கறிஞர் என்ற விஷயம் தெரியாது. தன் தாயின் படத்தை வணங்கி விட்டு முதல் முறையாக நீதிமன்றத்திற்குச் செல்கிறாள் பொற்கொடி. நீதி மன்றத்தில் அனைவரும் புதிதாய் வரவிற்கும் வழக்கறிஞரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். பொற்கொடி நீதி மன்றத்தில் நுழைந்தவுடன் அனைவரும் அவளை அதிர்ச்சியோடுப் பார்த்தனர். சுந்தரேசனும் அதிர்ச்சியில் மூழ்கிப் போயிருந்தான். பொற்கொடி தன் வாதத் திறமையை அங்குக் காட்டினாள். எதிர் வழக்கறிஞரே அதிர்ந்துப் போய்விட்டார். இறுதியாக தீர்ப்பு பொற்கொடி பக்கம் சாய்ந்தது. முதல் முறையாக எதிர் வழக்கறிஞர் தோல்வியச் சந்திதார். பொற்கொடியாப் இப்படி பேசினாள் என்று எண்ணிப் பார்க்கவே சுந்தரேசனுக்கு முடியவில்லை. தன் தாய் கண்டக் கனவு நிறைவேறிவிட்டது என்று எண்ணி மிகவும் சந்தோஷப்பட்டாள். சுந்தரேசனும் ஊர் மக்களும் பொற்கொடியை வாழ்த்திப் பேசினர். அவளது திறமை தன் கணவர் மூலம் நிரவேறியதை எண்ணி மகிழ்ச்சி அடந்தாள். அதுமட்டுமின்றி அவளின் தன்னமிக்கையே இச்செயலுக்கு கிடைத்த வெற்றி என்று ஊர் மக்கள் அவளை வாழ்த்தினர்.        


No comments:

Post a Comment