சிறுகதை:-
பிள்ளையார்
சுழி
“கிரீச்,
கிரீச், சிரீச் !”
சைக்கிளை
வேகமாக மிதிக்கிறான். மழைக்கு முந்திவிட வேண்டுமென்ர துடிப்பு.
‘லேட்டாபோன
முதலாளி கோபிப்பார். அப்புறம் இந்த பியூம் வேலைகூட இல்லாமப் போயிடும். எல்.சி.இ பெயிலானவனுக்கு
வேறு வெள்ளைச்சட்டை வேலை என்ன கிடைக்கும்?’
‘அப்பா
திரும்பவும் பிரைவேட்ல படிடான்னார். நான் வேணான்னுட்டேன். படிப்பு ஏர்றவன்தானே படிக்கணும்?
இந்த மரமண்டையிலதான் ஒன்னும் ஏறமாட்டேங்குதே.’
எல்.சி.இ.
தேர்வு முடிவு வெளிவந்த கையோடு அக்கரை பஸ் ஸ்தாண்டத் தாண்டி ஜாலான் பெர்சியாரான் தெங்ஙவில்
ஒரு ஷிப்பிங் அண்ட் ஃபார்வார்டிங் ஏஜென்சியில் படியேறி வேலை கேட்டான்.
பியூன்
வேலை கிடைத்தது. மாதம் நூற்றிருபது ரிங்கிட் சம்பளம். அதுவே அதிகம் என்பது முதலாளியின்
நினைப்பு. சிலவேலைகளில் அவனை நாயாய் வெளியிடங்களுக்குத் துரத்துவதிலிருந்து புரிந்து
கொண்டான்.
ஜாலான்
லங்காட்டிலுள்ள தாமான் டிரெமெல்-பியில் வீடு. அப்பா பி.கே.என்.எஸ்.ஸில் வாங்கி போட்டது.
வீட்டுக்கும் ஆபீசிற்கும் இரண்டரைமைல் இடைவெளி.
நண்பகல்
உணவுக்காக ஒரு மணிக்கு சைக்கிளில் ஏறி மிதிக்க வேண்டும்.
அரைகுறைக்
கை கழுவலோடு சாப்பிட்டு முடித்து வேர்க்க விறுவிறுக்க மீண்டும் மிதித்தால் அலுவலகம்
போய்ச் சேர மணி இரண்டாகிவிடும்.
போனதும்
முதலாளியும் ஆபிசர்களும் துரத்துகிற இடத்துக்கு ஓட வேண்டும். மாலை ஐந்து மணி வரை இந்த
மாதிரியே ஓடிக் கொண்டிருக்கவேண்டும்.
‘இப்பபோனதும்
எங்கு துரத்துகிறார்களோ?’ பெடலை அழுத்தி மிதிக்கிரான். இன்னும் ஒரு முக்கால் மைல் தூரம்
இருக்கிறது.
ஒரு
மின்னல் ஓர் இடி!
பெருமழை.
பக்கத்திலிருந்த பஸ் ஸ்டாப்பில் ஒதுங்குகிறான்.
‘சே,சே!
இந்ட மழைக்கு நேரம் காலம் தெரியலே!’
ஓர்
அரைமணி நேரப் பெருமழை. பின்னர் அது தூறலாகக் குறைகிறது. கைக்குட்டையை எடுத்துத் தலையில்
போட்டுக் கொண்டு மிதிக்கிறான்.
டவுனுக்குள்
நுழையும் போது மழை வழுக்கலின் காரணமாக் எக்ஸிடெண்டுகள்.
மனிதர்களுக்கு
அது வேடிக்கை. அவனுக்கு அவற்றையெல்லாம் கவனிக்க நேரமில்லை. நோக்கமெல்லாம் ஜாலான் பெர்சியாரான்
தெங்ஙவில்.
சைக்கிளை
நிறுத்திப் பூட்டிவிட்டு உடம்பைத் துடைத்துக் கொண்டே படியேறுகிறான். தூறலால் அரைகுறையாக
நனைத்த உடம்பு.
முதலாளி
ஆலெங்கின் முகத்தில் கடுமை. அவர்களெல்லாம் காரில் வருபவர்கள் அல்லவா?
அவர்
இப்போது மணி எத்தனை என்று கேட்பவரைப் போல சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்க்கிறார்.
அரை
மணிநேரம் லேட்.
“ஏன்
லேட்டாக வந்தாய்?” பதில் இல்லாமலேயே புரிந்து கொள்ளக்கூடிய கேள்வி, இருந்தாலும் அவர்
கேட்டார்.
“வரும்
வழியில் நல்ல மழை. கொஞ்ச நேரம் ஒதுங்கியிருந்தேன்.”
“மழையையும்
வெயிலையும் காரணம் காட்டி இங்கு சம்பளம் பெறமுடியாது தெரியுமா? சம்பளத்தை இரண்டுநாள்
லேட்டாகக் கொடுத்தால் ஒங்களுக்கெல்லாம் எவ்வளவு கோபம் வருகிறது.”
“என்னால்
மழையில் கூட வந்திருக்க முடியும். உடை பூராவும் தெப்பமாக நனைந்த பின்னர் ஆபிசுக்கு
வந்துதான் என்ன பிரயோசனம்? ஈர உடையோடு ஆபீசிக்கு வேலை செய்ய முடியுமா?” பேச்சில் பணிவு.
“
நீ சொல்லும் பதில் ஆபீசருக்குத்தான் பொருந்தும். அவர் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்கிறவர்.
ஒரு பியூனுக்கு அல்ல, என் நிறுவானத்தில் சைக்கிளில் வரும் ஆபீசரை நான் வேலைக்கு அமர்த்துவதில்லை
தெரியுமா? உன் அரைமணி நேர தாமத்த்தால் எத்தனை கம்பெனிகளுக்கு போய்ச் சேரவேண்டிய கடிதங்கள்
முடங்கிவிட்டன. இதனால் எனக்கு எவ்வளவு நஷ்டம் வரக்கூடும் தெரியுமா?”
அவன்
அந்தத் தபால் பையைப் பார்க்கிறான். ‘எந்த மழையிலும்நனையாது’.
‘இந்தப்
பை நனையாது என்ற காரணத்தால்தான் நான் நனைவதைப் பற்றிக் கவலைப்படாமல் பேசுகிறாரோ? அது
ஒரு நாலாவது காரணமாகத்தான் இருக்க வேண்டும். இந்தியர்கள் பிச்சைக்கார வம்சம் என்ற எண்ணத்தில்
உதித்த இளக்காரம்தான் முழு முதற்காரணம்.
‘
இப்போது கூட தாமதமாகிவிடவில்லை. இந்த அரைமணி நேர தாமதத்தை என்னால் நிறைவு செய்து விடமுடியும்’
அவனுடைய மன ஓட்டம்.
“இந்தப்
பிளடி இந்தியகாரனுங்களே இப்படித்தான். வரும் போது பூனை மாதிரி வருவான்கள். வந்தப்புறம்
புலி மாதிரி பாய்வான்கள். பல்லும் நகமும் இல்லாத புலிகள்.
அவனுடைய
இரத்தத்தைச் சுட்டுச் சூடேற வைத்த வார்த்தைகள் அவை.
“என்னைப்
பற்றிப் பேசு, என் சமூகத்தைப் பற்றிப் பேச உனக்கு அருகதை இல்லை. பணத்தால் நீங்கள் உயர்ந்திருக்கலாம். கண்ணியத்தில் நாங்கள் இமயமலை.”
இருவருக்கும்
வாக்குவாதம்.
நிலைமை
இன்னும் சற்று முற்றியிருந்தால் கைகலப்பு ஏற்பட்டிருக்ககூடும்.
“தம்பி
கண்ணியவான். இதுதான் வாசற்படி. நீ போகலாம்.”
அன்றுவரை
செய்திருந்த வேலையின் கூலியைப் பெற்றுக் கொண்டு படியிறங்கி வந்து விடுகிறான்.
வீட்டில்
அப்ப முணுமுணுக்கிறார். “இதுங்க எல்லாம் தறுதலைங்க. எங்க ஒரு எடத்துல அடங்கி ஒடுங்கி
வேலை செய்ய போவுதுங்க.”
வீட்டினுள்
சிறிய தங்கை அழுகிறாள். அம்மா அவனை அழைக்கிறார் : “டேய், அவளோட பலூன் வெடிச்சுப் போச்சு,
அழுவுறா. போயி கடையில் ஒரு பலூன் வாங்கியா!” பத்து காசு நாணயத்தைக் கையில் கொடுக்கிறார்.
சைக்கிளை
எடுத்துக்கொண்டு பலசரக்குக் கடையை நோக்கி மிதிக்கிறான். முதலாளி ஒரு கோத்தாவிலிருந்து
ஒரு பலூனை எடுத்துக் கொடுக்கிறார்.
“ஏங்க,
ஒரு கோத்தா பலூன் என்ன விலைங்க?”
“அந்த
வெவகாரமெல்லாம் ஒனக்கு ஏன் தம்பி, பலூன் வாங்க வந்தே, பேசாமே வாங்கிக்கிட்டுப்போ!”அவன்
மூளை பலமாக வேலை செய்கிறது. பலூனை தங்கையிடம் கொடுத்துவிட்டுத் திரம்பவும் சைக்கிளை
எடுத்துக் கொண்டு ஜாலான் துங்கு கிளானாவை நோக்கி மிதிக்கிறான்
விமர்சனம்
மூத்த
தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான ஆசிரியர் பி.கோவிந்தசாமி இச்சிறுகதையை எழுதியுள்ளார்.
இச்சிறுகதையின்மூலம் எழுத்தாளர் மாணவர்களுக்குக் கல்வியின் மீது நாட்டம் இல்லாமையைச்
சுட்டிக்காட்டுகிறார். மேலும் பிற இனத்தார் இந்திய சமூதாயத்தை மதிக்காத நிலையையும்
மட்டம் தட்டுவதையும் குறிப்பிட்டுள்ளார். பட்டப்படிப்பு இல்லாதவர்களையும் சமுதாயம்
ஏளனமாகப் பார்ப்பதோடு அசட்டைபன்னுவதும் உண்டு என்று இச்சிறுகதையிலிருந்து நன்கு அறிய
முடிகிறது. இச்சிறுகதை இளைஞர்களிடம் உள்ள தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் குறிக்கிறது.
சுய தொழிலிலும் சிறு தொழில்களில் ஈடுபடுவதின் மூலம் நம் வாழ்க்கையின் தரத்தை நாமே அதிகரித்துக்
கொள்ளலாம். இக்கருத்துகளை இச்சிறுகதையின் மூலம் எழுத்தாளர் வெளிப்படுத்துகிறார்.
நூல் விமர்சனம்
பெண்
குதிரை என்னும் நாவல், சை.பீர்முகம்மது ஆசிரியரின் கைவண்ணத்தில் பூத்த ஒரு நாவலாகும்.
வாழ்க்கையை உல்லாசமாக, ஆடம்பரமாக, சுகபோகங்களுடன் அனுபவித்தி மகிழவேண்டும் என்ற ஆசையோடு,
தன்னல நோக்குடன் செயல்புரியும் ஒரு பெண்ணை இந்நாவல் அறிமுகம் செய்கிறது. கமலவேணி என்னும்
கதாபாத்திரம் தனது நோக்கங்களுக்காக எதையும் செய்யத் துணிந்தவள் – எப்படியும் வாழலாம்
என்று செயல் புரிகிறவள். அம்முயற்சியில் மற்றவர்கள் பலியாவது பற்றி அவள் கவலைப்படுவதில்லை.
தான் பணத்தோடும் சிறப்போடும் சந்தோஷமாக வாழவேண்டும் அன்பதற்காகப் பிறர் குடும்ப வாழ்க்கையைச்
சிதைத்துச் சீர்கெடச் செய்யவும் தயங்காதவள்.
இந்நாவலின்
மூலம் எழுத்தாளர் கமலவெணியைப்போல் சில பெண்களும் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்துள்ளார்.
கமலவேணியின் வாழ்க்கைப் போக்கை நாகலட்சுமியின் நினைவுகளாக ஆரம்பத்தில் எழுத்தாளர் சித்திருக்கிறார்.
தஞ்சம் இல்லாமால் நாகசல்சுமியின் வீட்டில்
தஞ்சம் புகும் கமலவேணி மனம் திருந்தியவள் அல்ல. தன்வீழ்ச்சிக்குப் பழிவாங்குவது போல,
அவள் வசதி படைத்த ஆண்களைத் தனது நலனுக்காக உபயோகித்து கொள்வதில் நாட்டம் கொள்கிறாள்.
No comments:
Post a Comment