கவிதைகள்
வாழ்ந்து காட்டுவோம்!
தொழில்பலவாய்ப் பெருகிவரும் இந்த நாளிலே
- நாம்
தொடங்கிவிட்டால் உயர்வுவரும் நமது
வாழ்விலே
விழிதிறந்து வெளியில்வந்து விடியல்
காணடா - தம்பி
வேறுபட்டுப் பிரிந்துநின்றால் எல்லாம்
வீணடா!
காடுவெட்டி நிலந்திருத்திக் கண்ட பெருமையை - நீ
காலமெல்லாம் பேசிப்பேசி யாது கண்டனை?
நாடுசெல்லும் புதுவழியில் நடந்து
பாரடா - தம்பி
நாளையுன்றன் கையிலென்றே உறுதி பூணடா!
மூன்றினங்கள் வாழ்ந்தபோதும் ஆட்சி
ஒன்றுதான் - இங்கு
முன்னுயரும் வழியெவர்க்கும் பொதுவில்
ஒன்றுதான்
சான்றெனவே மற்றவினம் வளம் பெருக்குது
- தம்பி
சாணுயர்ந்தால் நம்மினம்ஏன் முழம் சறுக்குது?
பகுத்தறிவு வளர்ச்சியில்நாம் பழையவர் தானே - உயர்
பண்பாடு நெறியிலெல்லாம் சிறந்தவர் தானே
வகுத்துவைத்து குறள்நெறியை மறந்தத னாலே - தம்பி
வாழ்ந்து கெட்டோம் மறுபடிவா
வாழ்ந்து காட்டுவோம்!
கோவி. மணிதாசன்
கவிதையின் விளக்கம் :-
இக்கவிதையில் கவிஞர் கோவி. மணிதாசன் வேளை வாய்ப்பு பெருகி
வரும் இந்த நாளிலே நாம் விழித்து விட்டால் உயர்வு நமது வாழ்க்கையில் நிச்சயம் உண்டு.
இன்றைய உலகப் போக்கை கண் திறந்து பார்த்து நம் வாழ்க்கைக்கு விடியலைத் தேட வேண்டும்.
ஒற்றுமையாய் இல்லா விட்டால் வாழ்வதற்கு பயனில்லாமல் பேய்விடும்.
நடந்து முடிந்து போன கதைகளைப் பேசுவதில் ஒரு பயனும் இல்லை. உலகப் போக்கு எப்படி இருக்கிறதோ
அவ்வுலகத்தோடு பொருந்தி வாழ வேண்டும்.
மூவினங்கள் வாழ்ந்தப் போதும் ஆட்சி ஒன்றுதான், இருந்தாலும்
நம்மினம் இன்னும் முன்னேறாமல் இருக்கிறது.
பல கலைகளிலும், துறைகளிலும் நாம் கைத்தேர்ந்தவர்களாக இருந்திருக்கிறோம்.
அவற்றை இன்று மறந்ததினால் இந்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். வாழ்ந்து கெட்டோம்,
மீண்டும் நம்மால் முடியும் வாழ்ந்துக் காட்டுவோம் என்று தழிழர்களின் உணர்வுகளுக்கு உணர்ச்சியுட்டும் வகையில் கவிதையை வடிவமைத்திருக்கிறார்
கவிஞர்.
யார் தமிழ் படிப்பார்!
தமிழ்மா ணவரே தமிழ்மா ணவரே
தமிழைப் படிக்கத் தயங்குகின் றீரே
தமிழைத் தமிழ்மா ணவர்படிப் காமல்
இமிழ்கடல் உலகில் எவர்படிப் பாரே!
தாய்மொழி நமக்குத் தமிழ்மொழித் தேனே
தாய்நலங் காப்பது செய்கடன் தானே
தொடக்கப் பள்ளியில் தொளில் சுமந்த்தை
இடைநிலைப் பள்ளியில் இறக்கி வைப்பதா?
ஒராண் டல்ல ஈராண் டல்ல
அறாண் டாக அடிப்படைக் கல்வி
அளித்த மொழியின் அருமை மறந்து
புளித்தது என்று புகல்வதா இன்று!
ஆதியில் அறிவில் உறைத்த தமிழை
பாதியில் ஏளனப் படுத்தி ஒதுக்கிட
எண்ணும் எண்ணம் எப்படி வந்தது?
உண்ணும் உணவோ உவட்டிப் போகலாம்
தின்னும் பண்டம் தெவிட்டிப் போகலாம்
கண்ணும் கூடக் காண மறுப்பதும்
உற்றத்தாய் அன்பினை உதறிப் போவதும்
மற்றவர் நடுவில் மதிப்பை நல்குமா?
கற்றவர் அவையில் கையொலி பெறுமா?
சொந்தம் என்று வந்த பந்தம்
சொறு போடுமா என்று கேட்கும்
ஓரினம் தமிழ்ர் போலிவ் வுலகில்
வேறினம் இல்லை விதிவிதி என்றே
வீறு குறைந்த வீணன் இவனைக்
கூறுபோட்டுக் கொன்றிட்டாலும்
தீரா தென்றன் சினம்தீ ராது!
எந்த நாட்டினில் எந்த மொழிதான்
எவர்க்கும் சோற்றை ஏந்தி வந்து
துவையல் கறியுடன் ஊட்டு கின்றது?
உழைப்பும் உறுதியும் உள்ளவன் எவனுன்
மொழியில் பழியை ஏற்றுவ தில்லை
தமிழால் தமிழன் தாழ்ந்துபோ னானாம்
தமிழ்தான் இவனைத் தலையெடுக் காமல்
தரையொடு தரையாய்ச் சிறைப்படச் செய்த்தாம்
இப்படி யாஇவன் செப்பித் திரிவது
ஒப்பிடும் செய்தியா அப்படிச் சொல்வது
தாயா அருமைச் செயினுக் கெதிராய்த்
தீயாய் மாறித் தீய்க்க முனைவாள்
மொழிநம் உணர்வு மொழிநம் உயிர்ப்பு
மொழிநம் உரிமை வாழ்வைப் பெறவா முடியும்
மொழிநம் உரிமை காக்கும் பட்டயம்
உரிமை வாழ்வை உலகில் இழந்தவர்
பெருமை வாழ்வைப் பெறவா முடியும்
மொழிநலம் ஒன்றே இனநலம் காக்கும்
மொழிக்காப் பொன்றே இனநலம் காக்கும்
மொழிநலம் ஒன்றே இனநலம் காக்கும்
மொழிக்காப் பொன்றே இனக்காப் பாகும்
தமிழ்இந் நாட்டில் தழைப்பதும் இளைப்பதும்
தமிழ்மா ணவர்தம் தங்கக் கைகளில்
தமிழைப் படிப்பதே தமிழை வளர்க்கும்
இமயச் செயலாம் என்மா ணவரே!
பொன்முடி, கோலகுபுபாரு
கவிதையின் விளக்கம் :-
இக்கவிதையில் கவிஞர் தன் தாய் மொழியான தமிழ் மொழியை இன்றைய
மாணவர்கள் கற்கும் முறையையும் அதன் மீது வைத்திருக்கும் ஆர்வத்தையும் தனது கவிதையில்
ஆழமான கருத்துக்களை முன்வைக்கிறார். இந்தக் கவிதை மலேசிய இந்திய மாணவர்களைப் பார்த்து
கேட்கும் படியாகக் சூழல் அமைந்திருக்கிறது.
தமிழ் மொழியைப் படிக்கும் மாணவர்கள் தமிழைப் படிக்க தயங்குகின்றனர்.
நம் மொழியை நாம் படிக்காவிடில் எவர் அதைப் படிப்பர் எனக் கேள்விகளை எழுப்புகிறார்.
நம் தாய் மொழி தமிழ், அதனை ஒரு மகன் தன் தாயைக் எப்படி பாதுக்காகிறானோ அப்படி பாதுகாக்க
வேண்டும்.
மேலும், ஆரம்பப்பள்ளியில் கற்ற தமிழ் மொழியை இடைநிலைப்பள்ளிக்கு
செல்லும் போது அதை கற்ற மறுக்கின்றனர். ஆறாண்டுகள் படித்த தமிழ் மொழி புளித்து போய்
விட்டது என்று எண்ணி எப்படி தூக்கி எறிய மனம் வருகிறது என்று மிக கனத்த மனதுடன் எழுதிருக்கிறார்
கவிஞர்.
உண்ணும் உணவுக் கூடத் தெவிட்டலாம், கண் கூட காணாமல் போகலாம்,
ஆனால் தாயின் அன்பில் பிள்ளையைப் பிரிக்க முடியாது. அது போலவே தமிழ் மொழியும். நம்மை
விட்டு பிரியாமல் வைத்திருக்க வேண்டும்.
தமிழர் மரபில் தான் பகைவனாக இருந்தாலும் வீடு தேடி வந்தவனுக்கு
அறுசுவை உணவளித்து கொடுப்பர். உழைப்பும் உறுதியும் உள்ள மனிதன் தன் தாய் மொழிக்கு தீங்கு
விளைவிக்கமாட்டான். தமிழ் மொழி ஒருவரை உயர்த்துமே தவிர தாழ்த்தாது.
மொழி நம் உயிர், உணர்வு, உரிமை. தாய் மொழியை இழந்தவன்
தன் வாழ்வில் நிரைவான வாழ்க்கையை வாழ்ந்ததில்லை. மொழி நலம் ஒன்றுதான் இனநலத்தைக் காக்கும்.
நம் தாய் மொழியை இந்நாட்டில் தலைக்கச் செய்வதும் இழக்கச் செய்வதும் வருங்கால தமிழ்
மாணவர்கள் கையில் இருக்கிறது.தமிழ் மொழியைப் படித்து தமிழை வளர்க்க வேண்டும் என்று
கவிஞர் மாணவர்களுக்கு நல்னழிக்காட்டும் வகையில் இக்கவிதையை புனைந்திருக்கிறார்.
தமிழ்க் கவிதை
எதுகையென்ன? மோனையென்ன? கவிதை என்றால்,
எழுத்தசையும் சீர்தனையும் தேடிச் சேர்ந்து
பதுங்குவதா? பிதுங்குவதா விழிகள்? இல்லை!
பாவேந்தர் பேரனென்ற ஊக்கத் தோடு
மெதுமெதுவாய்ப் பயின்றேன்காண் கவிதைப் பாடம்
மெய்மறந்தேன் அதன்சுவையில் ஒன்றிப் போனேன்!
இதுவரையில் இலக்கியத்தின் சுவையை நாடி
யான்பெற்ற இன்பங்கள் கோடி கோடி!
வாழ்வுமெங்கள் வளமும்உயர் தமிழே என்று
வழங்காத வாயுண்டோ தமிழர் தம்மில்!
ஆழ்கடலில் முத்தெடுத்த களிப்புப் பொங்க
அருந்தமிழர் நாமணக்கும் அமுதப் பாட்டாய்ச்
சூழ்புரியும் பாவேந்தர் வரிகள் என்றும்
சுடர்ந்திருக்கும் உண்மையதை மறுப்பா ருண்டோ!
யாழ்குழ்லின் இசையெல்லாம் இணைத்து வார்க்கும்
இன்சுவையின் எல்லைவரை கவிதை செல்லும்!
துறைதோறும் கவிதைகளே இன்பம் சேர்க்கும்
தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்
நிறைவான எழுச்சிதரும் வீரப் பாட்டு
நித்திரைகொள் மழலையர்க்குப் பூத்தா லாட்டு
விரைவான வெற்றிகண்டால் பரணிப் பாட்டு
வீறுபெறு தமிழாநீ அச்சம் ஒட்டு!
மறையாநற் புகழ்சிறக்க வாழ்த்துப் பாட்டு!
மாத்தமிழர் வாழ்வெல்லாம் வாழும் பாட்டு
க. பெருமாள்
கவிதையின் விளக்கம் :-
இக்கவிதையில் கவிஞர் தமிழ் மொழி கவிதைச் சிறப்பையும் பாவேந்தரின்
கவிதை சிறப்பையும் கூறியிருக்கிறார். கவிதைக்கு அழகு எதுகை மோனை. பாவேந்தர் கவிதையில்
அவைகளைக் கண்டு வியந்தார் கவிஞர். அவரின் கவிதையில் ஒன்றினைந்து இதுவரையில் பல இலக்கிய
சுவையை நாடி கவிஞர் பெற்ற இன்பம் கோடி.
பாவேந்தரின் தமிழ்க் கவிதைச் சிறப்புகளை நாம் அறியாமல்
இருந்திருக்க முடியாது. அவருள் ஒழிந்திருக்கும் ஆழ்கடல் போன்ற தமிழ் மொழி கவிதை அதில்
பல இன்பங்களை நான் அறியப் பெற்றேன்.
அவரின் கவிதைக்கு எதிர்ப்புகள் ஏதுமில்லை. அவரின் கவிதைகள்
உலகமெங்கும் பரவியிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.
பாவேந்தரின் பாடல்களில் இன்பம், வீரம், தாலாட்டு, வெற்றி,
வாழ்த்து என பல கருத்துக்களில் இயற்றிருப்பது தமிழ் கவிதைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாகும்.
தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ!
வஞ்ச மனத்துடன் வந்த புகுந்தவர்
வாலை யறுத்திட வாராயோ - வரும்
வெஞ்ச மருக்கிது வேளை பொருட்குவை
மேலும் குவித்துடன் தாராயோ?
செரு மலேசியச் சீர்மிகு நாட்டினைச்
சேரு மிடர்ப்பகை தீராயோ - உனை
வாரி யணைத்தவள் வாழ்வு சிறந்திட
வாரி நிதிக்குவை தாராயோ
ஆறு மலைத்தொடர் அன்பு மனத்தொடர்
ஆர்ந்த கலைத்தொடர் தாய்நிலமே
- உனை
வேறு நிலத்தவர் வெல்ல முனைந்திடின்
வேட்டி லவர்தலை போய்விழுமே
வீடு விளங்கிடப் பெற்ற குழந்தையை
நாடு விளங்கிடத் தாரீரோ - அவர்
பீடு விளங்கிடக் கேடு களைந்திடப்
பிள்ளையை பெற்றவர் வாரீரோ!
தங்க மெனத்தகும் துங்கு மொழிப்படி
சிங்க மெனப்புகக் கூறீரோ - நாம்
பொங்கி யெழுந்திடின் புல்ல ரிருப்பது
பூமியி னுள்ளெனக் கூறீரோ
அப்படி இப்படி தப்படி வைத்தனர்
எப்படி யும்படி ஏறிடவே - அவர்
ஒப்பிட வீரம் உணர்த்திடு; வைத்திடும்
ஒவ்வொரு காலடி கூறிடவே!
கவிவாணர்
ஐ. உலகநாதன்
கவிதை விளக்கம் :-
இக்கவிதையில் கவிஞர் ஐ.உலகநாதன் தன் மனதில் எழுந்திருக்கும்
ஒரு தனி மனிதனின் ஆற்றாமையை வெளிப்படுத்திருக்கிறார்.
தீய மனதுடன் நம் நாட்டிற்கு நம்மை அடிமைகளாக்க வந்திருப்போரின்
செயலை முடக்க வேண்டும். அவர்கள் தரும் அடிமை வேளைகலை செய்யக் கூடாது. மலேசிய நாட்டை ஒற்றுமையுடன் வந்திருக்கும் பகைவரை வீழ்த்த வேண்டும். நம் தாய் நாட்டை நாம் தான் சிறப்பிக்க
வேண்டும்.
பல அற்புதங்கள் நிறைந்து வழியும் என் நாட்டை, வேறு நிலத்தவர்
வெல்ல முன்வந்தாராயின் போட்டியில் கலந்துக்கொளவதற்கு முன் அவன் தலை தரையில் விழச் செய்ய
வேண்டும்.
வீட்டில் சிறந்த குழந்தையாக இருந்தால் அக்குழந்தையை நாட்டிற்கு
விளங்கச் செய்ய வேண்டும். ஒரு சிறந்த குடிமகனாக்க வேண்டும். நாட்டிற்கும் வீட்டிற்கும்
சிறந்த ஒரு வழிக்காட்டியாகத் திகழ வேண்டும்.
நம்மை இகழ்ந்தவருக்கு நாம் கொடுக்கக்கூடிய பதிலடி அவர்கள்
முன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துக் காட்டுவதாகும். அதற்கு நாம் முன்னேறுகின்ற காலடி இதற்கு
சான்றாகும்.
கவிஞர் ஐ.உலகநாதன் தன் மனதில் வைத்திருக்கும் இச்சமுதாயத்திற்கும்
மீது உள்ள பொறுப்புணைச்சியை கவிதை பாணியில் பரைச்சாற்றிருக்கிறார்.
எங்கள் நாடு!
இந்தநாடு எங்கள்நாடு
இந்தநாட்டு மண்ணிலே
இன்றிருக்கும் உயிர்கள்யாவும்
எங்கள்தாயின் பிள்ளையே
இந்தவானம் எங்கள்வானம்
இந்தவானின் மீதிலே
இங்கும்அங்கும் ஒடும்மேகம்
எங்கள்தாயின் கூந்தலே!
பாடுதென்றல் எம்மினத்துப்
பண்பெடுத்துப் பாடிட
ஓடுமாறும் இங்கிருப்போர்
ஒற்றுமையைக் கூறிட
காடுமேடு சீர்படுத்திக்
காதல்கொண்ட தந்தையர்
நாடுமலை நாடிதென்று
நாவினிக்கப் பாடுவோம்!
நான்பிறந்த நான்வளர்ந்து
நான்மணந்த நாட்டிலே
வீண்குழப்பம் இல்லையில்லை
வேற்றுமைகள் இல்லையே!
தேன்சுரக்கும் பூவடாநம்
தேசமக்கள் நெஞ்சமே
வீண்பகைக்கு வித்திடோம்
வீணர்களை விட்டிடோம்!
வந்துவந்து மக்கள்கூடி
வானளாவச் சேரினும்
தந்துதந்து பாலமுதம்
தாங்கிவந்த அன்னையைச்
சிந்துபாடிக் கைகள்கூப்பிச்
சிரங்கவிழ்த்து வாழ்த்தியே
எந்தநாளும் என்றனாவி
உன்றனுக்கே என்றிடு!
வே. சங்கு
சண்முகம்
கவிதையின்
விளக்கம் :-
இக்கவிதையில் கவிஞர் சங்கு சண்முகம் தன் நாட்டின் சிறப்பையும்
வளத்தையும் மிகத் துள்ளியமான கவிதை வரிகளில் எடுத்துரைத்திருக்கிறார்.
இந்த நாடு எங்கள் நாடு, இங்கிருக்கும் மண் என் தாயாகும்.
வானத்தில் தோன்றும் மேகங்கள் அவளின் கூந்தலாகும். வீசுகின்றத் தென்றல் வாழும் மக்களை
புகழ்ந்து பாடுகிறது. இங்கிருக்கும் காடு மேடுகள் எங்களின் ஒற்றுமையைப் பரைசாற்றுகிறது.
நான் பிறந்து, வளர்ந்து, மணந்த இந்த நாட்டில் வீண்குழப்பங்கள்
இல்லை, வேற்றுமைகள் இல்லை, வீணாக தேச மக்கள் சண்டைப் போடுவத்தில்லை. அனைவரும் ஒன்று
கூடி மகிழ்ச்சியாக எங்கள் வாழ்க்கையை வாழ்கிறோம். எந்த ஒரு பாகு பாடின்றி சுமுகமான
வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறனர் என்று மிக உறுதியுடன் தன் கைதையில் முன்வைக்கிறார்.
No comments:
Post a Comment